மன்னார் மெய்வல்லுனர் சங்கத்தினால் விசேட மரதன் நிகழ்வு! samugammedia

மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்,பெண் இருபாலருக்குமான  மாபெரும் மரதன் ஓட்ட நிகழ்வு ஒன்று இம் மாதம் 14 ஆம் திகதி இடம் பெறவுள்ளது

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவ,மாணவிகள்,விளையாட்டுகழக உறுப்பினர்கள்,விளையாட்டு அமைப்புக்கள் உட்பட பலர் பங்கு பற்றும் வகையில் குறித்த மரதன் நிகழ்வு இடம் பெறவுள்ளது

குறித்த மரதன் ஓட்ட நிகழ்வில் முதலாம் இடத்தை பெறுபவர்களுக்கு 20000 ரூபா பணப்பரிசும் சான்றிதல் மற்றும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெறுபவர்களுக்கு 10000 ரூபா பணப்பரிசும் சான்றிதலும் வெற்றிகிண்ணமும் மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு 5000 ரூபா பணப்பரிசும் சான்றுதல் மற்றும் வெற்றிகிண்ணம் வழங்கப்படவுள்ளது

இம் மரதன் போட்டியில் கலந்து கொள்ள விருப்பும் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆவணங்களுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மெய்வலுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *