இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு சற்று முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க 03 புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.





