12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது தொடர்பான முன்மொழிவுகளை இலங்கையிலுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் குழு வொன்று சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த முன்மொழிவில் எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலையில் கடனை மீள செலுத்துவதனை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வகை பாத்திரம் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனம் மற்றும் வட்டி ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இலங்கை சுந்தந்திரமடைந்ததன் பின்னர் கடுமையான டொலர் பற்றாக்குறை காரணமாக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டதுடன், 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதலாவது வெளிநாட்டுக்கு கடனை மீள செலுத்தமுடியாத நிலையை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள சில பொருளாதார இலக்குகளை அடைவதற்கு தவறும் பட்சத்தில், 2027 ஆம் ஆண்டு முதல் சலுகை கொடுப்பனவுகள் தானாக குறையுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கான திட்டத்திற்கு ஒப்பு கொண்ட போது உருவாக்கப்பட்ட கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் அளவுகோலை அடிப்படையாக கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்மொழிவின் நகல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கழக செயலகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது எனவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.




