நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பலில் இவ்வளவு வசதிகளா? samugammedia

40ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று(14) மீண்டும் ஆரம்பமாகின்றது.

மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ‛‛ நாகை- இலங்கை இடையே கப்பல் சேவை துவங்கப்பட்டிருப்பது நமது உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்‛‛ என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாகை- இலங்கை இடையே பயணிக்கும் கப்பலில் இவ்வளவு வசதிகளா?

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை  இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் கேரளாவின் கொச்சியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

“செரியபாணி” என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த பயணிகள் கப்பல் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்கள் கொண்ட குழுவினர் இயக்கும் இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகள் அமர்ந்தபடி பயணம் செய்யலாம்.

14 ஊழியர்கள் ,150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளைக் கொண்ட இந்த குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


கப்பலின் பயண நேரங்கள் தொடர்பில் அறிவிப்பு

செரியாபாணி எனும் பயணிகள் கப்பலானது தினசரி நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.

50 கிலோ எடையிலான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி

ஒரு பயணி, கப்பல் பயணத்தின் போது தன்னுடன் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். அதில் 20 கிலோவை பயணி தன்னுடன் வைத்துக் கொள்ளும் படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய பை என இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

இந்தியர் கப்பல் பயணத்தில் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்புவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

ஆனால், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.

விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் எப்படி சுங்கத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுமோ அதேபோல் கப்பல் பயணத்தின் போதும் ஆய்விற்குட்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *