பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருட நிறைவைக் குறிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சில் விசேட நினைவு முத்திரையொன்று வெளியிடப்பட்டது.
இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களான சிகிரியா மற்றும் மொன்ட் செயிண்ட் மைக்கேலை சித்தரிக்கும் 50 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளும் முதல் நாள் அட்டையும் இதன்போது வெளியிடப்பட்டது.
அதே நேரத்தில், முத்திரையின் பிரெஞ்சு பதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது, விரைவில் இது பிரான்சிலும் வெளியிடப்படும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் திரு. அலி சப்ரி, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. ஷான் பொன்சுவா பக்தே, வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் திரு. சாந்த பண்டார, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திரு. தாரக பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஆரா விஜுனிவர்தன, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, தபால் மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.