ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் – வேதனையாக உள்ளது என்கிறார் சாணக்கியன்…!samugammedia

“தமிழ் மக்களை மிக மோசமாக இந்த அம்பிட்டிய தேரர் கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். . 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடக்கும் பொய்யான விடயங்களை சித்தரிக்கும் வேலை திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அடாவடி பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரர், கடந்த காலத்திலேயே கிழக்கு மாகாணத்தை நாசமாக்கிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் அவர்களுடைய இனவாத கும்பல் கிழக்கு மாகாணத்தையும் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை அதிலும் குறிப்பாக என்னையும் குறிவைத்து ஒரு சில போலியான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகின்றார்கள்.

தெற்கிலே எங்களுடைய உரைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் சிங்கள சமூகம் மத்தியில் என்னை தவறான ஒருவராக சிங்கள மக்களுக்கு எதிரான ஒருவராக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சிங்களவர்களை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்கின்ற சிந்தனையுடன் உள்ள ஒருவராக எடுத்துக்காட்டுவதற்கு தான் இந்த முயற்சி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *