தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த மூன்று டிப்பர்களும் அதன் சாரதிகளும் தர்மபுர போலீசாருக்கு 28.10.2023 அன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூவரும் போலீஸ் விசாரணைகளின் பின் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தருமபுர பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.