மீன் சம்பந்தமாக கடல் வட்டாரம் சம்பந்தமாக பிரச்சினையே இல்லாமல் அவர்களுக்கு சட்டமூலமாகவும் அவர்களுக்கு இடம் கொடுக்கிறதுக்காகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மோடி அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களா? என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு தெரியும் எங்களுடைய இராணுவம் அவர்கள் எந்த நாளும் இந்தியாவிலிருந்து வரக்கூடிய மீன்பிடிகளை கைது செய்கிற விஷயமும் நாங்கள் அறிந்திருக்கிறோம். இன்றும் 15 பேரை விட மீன்பிடிக்கிறவர்களே இந்தியாவிலிருந்து வந்தவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.
எனவே அரசாங்கம் எங்களினுடைய நாட்டில் இருக்க கூடிய சட்ட திட்டங்களை மாற்றி இந்தியாவில் இருக்கிற மீன்பிடிக்கிறவர்களை எங்களினுடைய நாட்டிலே உள்ளுக்கு வந்து எங்களினுடைய கடல் வட்டாரத்திலே உள்ளுக்கு வந்து மீன் பிடிக்கிறதுக்கு அனுமதியை வழங்குவதற்கு தற்போது பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.
நான் நினைக்கின்றேன் இது ஒரு மிக மிக நாட்டிலே மீண்டும் ஒரு பிரச்சினையை உருவாக்க கூடிய ஒரு நிலைமை நாட்டிலே உருவாகும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.
ஏனென்றால் இப்படி ஒரு முடிவை எடுத்து ஏனென்றால் சட்டதிட்டமாக இந்தியாவில் இருக்கிற மீனவர்கள் இலங்கைக்கு வர அனுமதியை கொடுத்தார்கள் என்றால் இப்போது எண்களினுடைய நாட்டில் இருக்கிறவர்களுக்கு பெரிய ஒரு அநியாயம் நடக்கும். எண்களினுடைய கடலில் இருக்கிற சொத்துக்களை இழக்க கூடிய நிலைமை உருவாகும். இப்போது அவர்கள் சட்ட விரோதமாக வந்து எங்களினுடைய கடலுக்கு வந்து எண்களினுடைய மீனவர்களுக்கு சொந்தமான மீன்களை அவர்கள் பிடித்துக்கொண்டு போகிறார்கள்.
கடலில் இருக்க கூடிய சொத்துக்களை அவர்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள். எனவே சட்டமூலமாக நாங்கள் இடம் கொடுத்தால் எங்களுக்கு எதிர் காலத்தில் பல பிரச்சினைகள் மட்டுமல்ல எங்கள் நாட்டில் இருக்கிற கடலில் இருக்கிற எல்லா சொத்துக்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எடுத்துக்கொண்டு போகும் வாய்ப்பு இதன் மூலமாக உருவாகும்.
இப்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்த காலம் அவர் இந்தியாவுக்கு சென்று இந்திய பிரதமர் மோடியுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். பல விஷயங்கள் அவர் இந்தியா பிரதமருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மீன் சம்பந்தமாக கடல் வட்டாரம் சம்பந்தமாக பிரச்சினையே இல்லாமல் அவர்களுக்கு சட்டமூலமாகவும் அவர்களுக்கு இடம் கொடுக்கிறதுக்காகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மோடி அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களா? என்று கேள்வி எங்கள் முன்னாலே ஒரு கேள்வி இப்போது வந்திருக்கிறது.
ஏனென்றால் இப்போது இருக்கிற சட்ட திட்டங்கள் மூலமாக இந்திய மீனவர்கள் அல்ல வெளிநாட்டில் இருக்கிற யாருக்கும் எங்களினுடைய கடல் வட்டாரத்துக்கு வர முடியாது. ஆனால் இந்த சட்டங்களை மாற்றினால் அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் எங்ககளினுடைய கடல் பிரதேசத்துக்கு வரக்கூடிய நிலைமை நாட்டிலே உருவாகும்.
அப்படி என்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மோடியுடன் நடந்த பேச்சுவார்தைகளில் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எங்கள் முன்னாலே இருக்கிறது. எனவே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல எங்களினுடைய நாட்டிலே இருக்கிற மீனவர்களின் உரிமை, இலங்கை வட்டாரத்தில் கடல்களில் இருக்க கூடிய சொத்துக்களையும் மீன்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது தன ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக இருக்கிறது என்று நான் கூற விரும்புகிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.