இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது – விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ! samugammedia

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து படகையும்  அதிலிருந்து 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்தும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில்  மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை ரயிலை மறித்து போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் நவம்பர் 6ஆம் திகதி  திங்கட்கிழமை காலை முதல் மீனவர்களை விடுதலை செய்யும் வரை தொடர்ந்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இன்றில் இருந்து  தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *