
இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பக் கல்விக்கூடமாக ‘மக்தப்’ எனப்படும் ‘குத்தாப்கள்’ அமைந்திருந்தன. ஐவேளைத் தொழுகை இடம்பெறும் பள்ளிவாசல்களையொட்டியதாக இவை அமைக்கப்பட்டன. முஸ்லிம்களின் குடியேற்றத்துடன் பள்ளிவாசல்களும் தோற்றம்பெற்றன.