அதிக விலைக்கு அரிசி விற்பனை- நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி முடிவு ! samugammedia

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வியாபாரிகள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக இருந்து தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *