நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
“ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும் நாளையும் (31) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த ஆராய்ச்சிக்கு அமைய கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள் எடுக்கப்படவுள்ள நிலையில், அதில் நாரா நிறுவனம் மற்றும் கடற்படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஆய்வின் போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்த சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டின் மேற்குக் கடலில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சீன கப்பல்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.