அடுத்த மின்சார கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் மின் கட்டண திருத்தம் செய்யப்பட்டதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மின்கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
The post அடுத்த மின்சார கட்டணம் திருத்தும் நாள் அறிவிப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.