ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சண்டிலிப்பாய் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இருந்து குறித்த கட்சியினரை வெளியேற்றுமாறு கோரி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பாடல் அலுவலகம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தினை விட்டு வெளியேறுமாறு உரிமையாளரால் கோரிக்கை விடுக்கபட்டு வந்த நிலையில் அவர்கள் வெளியேறாத நிலையில் இன்று வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை குறித்த அலுவலகம் பெரும்பாலான நேரங்களில் மூடி இருப்பதை அவதானிக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




