உலக சாதனை படைப்பதற்காக நடைபயணம் தொடர்கிறது…! samugammedia

இலங்கையின் 25 மாவட்டங்களில் 3039 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து உலக சாதனை படைப்பதற்காக அக்குரஸ்ஸ பரதுவ வத்தையைச் சேர்ந்த சுப்ரமணியம் பாலகுமார் (50 வயது) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் தனது பயணத்தை அண்மையில் ஆரம்பித்து, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று மீண்டும் கொழும்பின் ஊடாக அக்குரஸ்ஸ நோக்கிச் நடையாக செல்கிறார்.

இவ்வாறு உலக சாதனையை நிகழ்த்தும் நோக்கில் தனது நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சுப்ரமணியம் பாலகுமார் நேற்று முன்தினம் மாலை புத்தளத்தை வந்தடைந்தார்.

அவருக்கு புத்தளம், பாலாவி மற்றும் மதுரங்குளி உள்ளிட்ட நகரங்களில் மூவின மக்களும் வரவேற்பை வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.

இவர் நேற்று காலை புத்தளத்தில் இருந்து சிலாபம் வரை தனது பயணத்தை ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *