கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியின் தருமபுர வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதி ஓரமாக நின்ற 60 வருடங்களை கடந்த பாரிய ஆலமரம் ஒன்று அதன் ஒரு கிளை சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக வீதியில் முறிந்துள்ளது.
அதன் மறுகள் காற்று வீசினால் முறிந்து விழும் நிலையில் காணப்படுவதுடன் அந்த மரமும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் இவ் வீதி ஊடாக தினமும் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பான நிலையில் மரம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என பாதசாரிகள் மற்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.