மலையக மக்களுக்கு 10000 வீடுகள் – உறுதி அளித்தார் K.அண்ணாமலை…!samugammedia

மலையக மக்களுக்கு 10000 வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறும் என இந்திய பாரதீய ஜனதாக்கட்சியின் உறுப்பினர் K .அண்ணாமலை  உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்ற  “நாம் -200” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், 

இந்தியாவிலிருந்து இந்திய பிரதமரின் சார்பாக இங்கே வந்த நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் அவர்கள் முக்கியமான விடயங்களை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அறிவித்திருக்கிறார். குறிப்பாக மலையக தமிழர்களினுடைய நெடுநாள் கோரிக்கை நான்காயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தாலும்  கூட இன்னும் நிறைய வீடுகள் வேண்டும் என்ற உங்களுடைய கோரிக்கை.  இந்திய அரசு 2020 இல் இந்த் அறிவிப்பை வெளியிட்டும் அது மூன்றாண்டு காலமாக கொரோனா காரணமாக அது நடைபெறாமல் அந்த திறப்பு விழா இன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக 10000 வீடுகள், அதற்கான அந்த வீடுகளுக்கான foundation ஸ்டோனை  நடைபெறக்கூடிய விழாவில் வில் நாங்கள் பார்த்தோம். 

கடந்த ஆண்டு மே மாதம் இங்கிருந்து நுவரேலியாவுக்கு வந்த பொழுது வந்து உங்களுடைய இல்லங்களை பார்க்கும் பொழுது நிச்சயமாக எனக்கும் தோன்றியது ஒரு தமிழனாக இந்த மக்களுக்கு அற்புதமான வீடுகள் தேவை என்று. இன்றைக்கு அது நடந்திருக்கிறது மிக வேகமாக அந்த 10000 வீடுகளும் கட்டி முடித்து உங்களினுடைய கைகளுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதைத்தாண்டி மிக முக்கியமான முடிவுகளையும் இலங்கையினுடைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். உங்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருக்க கூடிய  நிலத்தினுடைய உரிமை அந்த முடிவையும் கூட அறிவித்திருக்கின்றார். நிச்சயமாக மலையக தொழிலாளர் அனைவரினுடைய கையிலே அவர்களுக்கு சொந்தமாக ஒரு பட்பட்டா  நிலம் இருக்கும் என்பதும் கூட ஊர்யிதமாக இருக்கிறது. அதுவும் ஆண்டவன் அருளால் நிச்சயமாக முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *