யாழ் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான புதிய நிர்வாகம் தெரிவு…!samugammedia

யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்குழுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று(04)  மாலை கலைத்தூது மண்டபத்தில்  இடம்பெற்றது.

இதில் பழைய நிர்வாகத்தினர் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு எதிர்வரும் 2ஆண்டுகளுக்கான  புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. 
அதனடிப்படையில் யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய கிருபானந்தக் குருக்களும் இணைத்தலைவர்களாக  அருட்தந்தை ஜெபரட்ணம்,  நாகவிகாரை விகாராதிபதி ஶ்ரீ  விமலதேரர், மௌலவி ஏ.எம்.றழீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். 
செயலாளராக அருட்பணி இந்திரதாஸ் ராஜ்குமார், உபசெயலாளராக வண கனகலிங்கம் ராஜா, பொருளாளராக திருமதி ஜானகி தர்மஜீலன், நிர்வாக சபை உறுப்பினர்களாக மௌலவி பிஏஎஸ் சுபியான், பிஆர் லயன் ரஞ்சன், அருட்பணி எஸ்டிபி செல்வன், திருமதி யே.ஹிரோமி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *