உரிய கொடுப்பனவு வழங்கும் வரை சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டுபணிகளில் இருந்து விலகுவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறிதெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏனைய கிராம உத்தியோகத்தர்களின் சங்கங்களும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கும் சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகள் இந்த மாதம் முதலாம திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி, சனத்தொகை மதிப்பீட்டில் முதல் கட்டமாக ஜனாதிபதி செயலகம் பதிவு செய்யப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.