ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைக்காவலர் ஒருவர் திகன பிரதேசத்தில் கைது…!samugammedia

கண்டி – திகன பஸ் நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுதும்பர சிறைச்சாலையில் கடமையாற்றும் காவலாளியே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் இன்று (05) கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *