யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (05) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லால் பெரேரா என்கிற 61 வயதுடைய தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவரே உயிரிழந்துள்ளார். மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கி இருந்தநிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் உள்ள விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு appeared first on Tamilwin Sri Lanka.