யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா உற்சவம் நேற்றையதினம் ( 5 )மற்றும் இன்று (6) ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது. திஸ்ஸ விகாரையில் நேற்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றம் கட்டளை
“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டனர். இதன்போது, அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை திஸ்ஸ விகாரை போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்று முன்தினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
The post யாழில் திஸ்ஸ விகாரை தொடர்பில் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.