யாழில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லவுள்ள சித்திர தேர்…! திருநீற்றுச் சித்தர் கோரிக்கை…!samugammedia

இராவணேஸ்வரன் சித்திர தேருக்கு நிதி சேகரிக்கும் அருள் பணியை தாம் ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கு அடியவர்கள் உதவ வேண்டும் என திருநீற்று சித்தர் என அழைக்கப்படும் , தவத்திரு கணபதி கதிர்வேல் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கணபதி கதிர்வேல் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் வடமராட்சி  தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரையை முன் நின்று நடத்தி வருகிறேன். யாத்திரையின் போது , முன்னின்று வேல் தாங்கி செல்பவன் நானே. 

எதிர்வரும் காலத்தில் பாத யாத்திரையின் போது சித்திர தேரினையும் இழுத்து செல்ல உள்ளோம். அந்த சித்திர தேரினை வடிவமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியுதவிகளை அடியவர்கள் தந்து உதவ வேண்டும் என தெரிவித்தார். 

Leave a Reply