நுவரெலியா தபால் அலுவலக விவகாரம்…! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போர்க்கொடி…!samugammedia

நுவரெலியா நகரின் மையத்தில் அடையாள சின்னமாக 130 வருடங்களுக்கு மேலாக விளங்கும் நுவரெலியா தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் குறித்த தபால் நிலைய கட்டிடத்தை சுற்றி கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், அரசுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தின் பின்னணி

ஹோட்டல் திட்டமாக நுவரெலியா தபால் அலுவலகத்தை பிரபல ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர் குனவர்தன,

நுவரெலியா தபால் நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை புனரமைக்கவோ அல்லது வர்ணம் பூசவோ முடியாத நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

செயலிழந்த மற்றும் பயன்படுத்தப்படாத கட்டடத்தை வளமாக பயன்படுத்துவதற்கான யோசனையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“சீதா எலியா வழியாக வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *