மஸ்கெலியாவை சுற்றிவளைத்த பொது சுகாதார பரிசோதகர்கள் குழு…! சிக்கலில் வர்த்தகர்கள்…! samugammedia

எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் பொருட்களை வழங்கும் நோக்கில் மஸ்கெலியா நகரிலுள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இன்று (08) அவசர பரிசோதனையை மேற்கொண்டது.

 மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளை நடத்தி, காலாவதியான பொருட்களை விற்பனை செய்த, உலர் உணவுகளை விற்பனை செய்த பல வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பி.நரேந்திரா தெரிவித்தார்.  

குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் நரேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

 இந்த அவசர பரிசோதனையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *