எமது ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை…! சஜித் திட்டவட்டம்…! samugammedia

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்குவோம்  என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால்இபெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறினாலும்இநமது நாட்டில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை 32சதவீதம்தான். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

பெண்களுக்கு முறையான ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பெண்களின் உரிமைகள் வலுப்பெறுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக தனியான வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும்.

கல்வி ஒரு நல்லொழுக்கமுள்ள, மேம்பட்ட மற்றும் ஞானமுள்ள நபரை உருவாக்கும் போது சுகாதார கட்டமைப்பு அந்நபரின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதால், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய புரட்சி ஏற்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆரம்ப காலத்திலிருந்தே பெண்களின் ஆரோக்கியத்திற்கு நியூசிலாந்துஇஸ்காட்லாந்து போன்ற நாடுகள் முன்னுரிமை அளிப்பது போல் நாமும் எமது ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவோம்  எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply