தம்புள்ளையில் வாகன விபத்தில் சிக்கி இராணுவ அதிகாரி உயிரிழப்பு…!samugammedia

தம்புள்ளை – ஹம்பரான வீதியின் ஔடங்காவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கிச் சென்ற இராணுவ வேன் ஒன்று அதே திசையில் சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது டிப்பரின் பின்பகுதியில் மோதியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *