தமிழர் தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணம்…! சிவசேனை நடவடிக்கை…!samugammedia

தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும் என சிவசேனை அமைப்பு   வேண்டுகொள் விடுத்துள்ளது.

இது தொடர்பில், மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான சிவசேனை அமைப்பினர் நான்கு கோரிக்கைகளை இந்திய அரசாங்கத்திடம் மகஜர் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகைதந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் குறித்த மகஜர் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடாக கையளிக்கப்பட்டதாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவசேனை அறிவித்துள்ளது.

அந்த நான்கு கோரிக்கைகளாவன,

1) 1987 இந்தியா இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும்.

2)தமிழகத்தில் உள்ள பாரதிய வித்தியா பவன் அமைப்பை அழைப்பு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கலைகள் இசைகள் என்பவற்றை கற்பிக்க வேண்டும் 

3)காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகங்களில் இலங்கை மற்றும் இந்திய ரூபாயை மாற்ற வங்கி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

4)மதமாற்றம் செய்பவர்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்குள்ளும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள்ளும் அனுமதிக்க கூடாது என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *