தரம் குறைந்த எரிபொருள் சந்தைக்கு…! சபையில் உண்மையை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் samugammedia

 

பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு குறித்து தான் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும் குறித்த எரிபொருள் ஏலவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 

அமைச்சர் என்ன சொன்னாலும் அது நடந்துள்ளதால் இது தொடர்பில் சரியான தகவல்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த தரக்குறைவான எரிபொருள் நல்ல எரிபொருளுடன் கலந்து சந்தையில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும், 

இங்கு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதால் இதற்கு பொறுப்பான அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் இது குறித்து வெளிப்படுத்திய போது, 

பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி வெளிப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்தியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவலின் அடிப்படையிலேயே தாம் இந்த தகவலை அன்று சமர்ப்பித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *