வடக்கு இளைஞர்கள் மத்தியில் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக கலந்துரையாடல்…!samugammedia

இளைஞர்கள் ஒருமைப்பாடு எனும் தலைப்பில் வடமாகாண இளைஞர்கள் மத்தியில்  சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலான  கருத்தரங்கு இன்று யாழ் சரஸ்வதி மண்டபத்தில்  இடம்பெற்றது . 

குறித்த கலந்துரையாடலை  மகளீர் அபிவிருத்தி நிலையம் மற்றும் அகில இலங்கை தொழலாளர் சங்கங்களிள் கூட்டமைப்பு / பெருந்தோட்ட துறை மக்கள் குரல் அமைப்பினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு  செய்திருந்தனர். 

இதில் சிறப்பு விருந்தினர்களாக  மகளீர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் சரோஐா சிவசந்திரன் ,அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின்  தேசிய ஏற்ப்பாட்டாளர்  அன்ரனி யேசுதாசன், வடமாகாண தலைவர் கடற்றொழிலாளர் இணை தலைவர்  n.v சுப்பிரமணியம், தேசிய இளைஞர் சேவை வடமாகாண பணிப்பாளர் திருமதி விமலேஸ்வரி சிறிகாந்தரூபன்,  இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழு யாழ் பிராந்திய பணிப்பாளர் கனகராஜ், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

இதில் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகள்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *