கார்த்திகை வாசம் ஆரம்பம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ”கார்த்திகை வாசம்”  மலர் கண்காட்சியானது  நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பமானது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ”கார்த்திகை வாசம்” என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அவைத் தலைவர் சி வி கே சிவஞானத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன்தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இக் கண்காட்சியானது  இம் மாதம் 30ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு  7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இக்கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம் முறையும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *