நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு ஆட்சியாளர்களே காரணம்…! கோவிந்தன் கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு…!samugammedia

எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு எமது நாட்டின் ஆட்சியாளர்களே  காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக அதில் அத்துமீறியவர்கள் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் தீர்ப்பொன்றினை  வழங்கியுள்ளது.

இந்தத்தீர்ப்பினை அமுல்படுத்த வேண்டியது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கடமை. ஆனால்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதிமன்றத் தீர்ப்புக்குச் சவால் விடுபவராகவே அன்றும் இன்றும் உள்ளார்.

எமது நாட்டின் பாதுகாப்புக்கு அந்நிய நாடு மற்றும் அயல்நாடு ஒன்றின், நாற்புறமும் கடல் சூழ்ந்துள்ளதால் எல்லைப்புற நாடு ஒன்றின் அச்சுறுத்தலுமில்லை. எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எமது நாட்டின் ஆட்சியாளர்களே காரணம்.

 எந்தவோர் அந்நிய நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுமில்லாத எம் நாடு பெரும் தொகையை ஒதுக்கியுள்ளது. இத்தனைக்கும் யுத்தம் நிறைவுக்கு வந்தது.

நாட்டில் அமைதி ஏற்பட்டது.ஆனால், யுத்தத்துக்கான காரணம் இன்னமும் களையப்படவில்லை. அதனைக்களைய ஆட்சியாளர்களுக்கும் விருப்பமில்லை.

ஆட்சியாளர்களுக்குப் பிச்சைக்காரன் புண்ணைப்போல ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கு இப்பிரச்சினை தேவை  எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *