யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு பொலிசார் இன்றுகாலை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.





வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றையதினம் இடம்பெறவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
குறித்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்து கொள்ள வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






