மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் – ஜனாதிபதிக்கு கலை அரசன் எம்.பி. வேண்டுகோள்…!samugammedia

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மின்சாரம் கிடைக்கப்பெறாததால் வைத்தியரும் நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக கலை அரசன் எம்.பி. தெரிவித்துள்ளார் 

 பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போதே  கலை அரசன் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரதேசம் சார்ந்த சில விடயங்களை பேசலாம் என்று நினைக்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் பிரபல வைத்தியசாலைகள் உள்ளன. அங்கே  நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் 24 மணித்தியால மின்சார சேவை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவ்வாறான சந்தர்ப்பம் இல்லை.  மின்சார தடை  அங்கு எற்படும் சந்தர்ப்பங்களில் பல தடவை மின்சார சபைக்கு முறையீடு செய்திருந்த போதிலும் அதற்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை. ஏனைய வைத்தியசாலைகளுக்கு  24 மணி நேர மின்சார சேவை வழங்கப்பட்ட போதிலும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை. 

இவ்விடயம் தொடர்பாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே இப்பிரச்சினையை தீர்க்க ஆவண செய்ய வேண்டும். அத்துடன் இந்நாட்டில் பல இடங்களில்  சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நாவிதன்வெளி பிரதேசத்திலும் இவ்வாறான பிரச்சினையால் காணப்படுகின்றன. அதனையும் தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இன்னும் பல இடங்களில் எங்களுடைய மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறான மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். எங்களுடைய பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். இதனை கருத்திக்கொண்டு எமது பிரதேசத்தில் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதற்கு   சிறப்பான உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *