ஆலங்குளத் துயிலுமில்லத்துக்கான விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு!samugammedia

இம்முறை சம்பூர் – ஆலங்குளம் துயிலுமில்லத்திற்கு நினைவேந்தல் செயற்பாடுகளுக்காக வருகை தரும் பெற்றோர்களின் நலன் கருதி விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின்  திரியாய் , தம்பலகாமம் , வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற இடங்களிலிருந்து குறித்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சென்ற வருடம் செயற்படுத்தப்பட்ட இச் சேவையினை திரியாய் குச்சவெளி கும்புருபிட்டி மற்றும் திருமலை நகரப்பகுதிப் பெற்றோர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதனால் குறித்த வழித்தடத்தினூடாக துயிலுமில்லம் வருகைதரவுள்ள பெற்றோர்கள் ஏற்பாட்டுக் குழுவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினால் மாத்திரமே குறித்த பஸ் சேவை செயற்படுத்தப்படும் என்பதனையும் தம்பலகாமத்திலுள்ள பெற்றோர்களும் இந்த நடைமுறையினைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *