வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழ் இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!samugammedia

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இரண்டு இளைஞர்களும் 25 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற இரு இளைஞர்களே இவ்வாறு விமான நிலைய குடிவரவு , குடியகல்வு கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி ஏர்லைன்ஸூக்கு சொந்தமான டி.கே 731 இலக்கம் கொண்ட விமானம் மூலம் பயணிப்பதற்கு குறித்த இளைஞர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கொழும்பு – பொரளை பகுதியைச் சேர்ந்த தரகர் ஒருவரால் சகல ஆவணங்களுடன் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி இரு இளைஞர்களும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *