19 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி அணியினர் 8 விக்கட்டுக்களால் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தெரிவானது.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா கல்லூரி மைதானத்தில் (23) நடைபெற்ற இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான (பிரிவு – 111) கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி அணியும் மட்டக்களப்பு புனித மைக்கல் தேசிய கல்லூரி அணியும் கலந்துகொண்டன.
மட்டக்களப்பு, கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி 27 ஓவர்கள் முடிவில் சகல வீக்கட்டுக்களையும் இழந்து 92 ஒட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 17 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 93 ஒட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்த கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர், பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் றிழா உட்பட இவ் வெற்றிக்காக ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய சிரேஸ்ட ஆசிரியர் கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் யு.எல்.எம்.ஹிலால் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.