மாவீரர்களின் சாபத்தை ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை! சாணக்கியன் ஆதங்கம் samugammedia

 

மாவீரர்களின் சாபத்தை கோட்டாபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்றைய தினம்  நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயக போராளிகளின் கட்சியின் துணைத் தலைவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இச் சட்டத்தை வைத்து எமது இனத்தினை முடக்கப் பார்க்கின்றார்கள்.

எமது இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்க முயலும் இந்த அரசாங்கம் மற்றும் இனவாதிகள் எம்மவர்களின் கல்லறைகளை பார்த்து இன்றளவிலும் பயப்படுவது ஏன்? 

கார்த்திகை மாதம் எம்மவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாதமாகும். அஞ்சலி செலுத்துவதற்கு கூட இவ் நாட்டில் எமது இனத்துக்கு உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *