யாழில் இளம் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அரச மரியாதையுடன் தகனம்!

அண்மையில் சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் முழ்கி உயிரிழந்த ஜா-எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதான கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின்~` இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பூதவுடன்   பூரண அரச மரியாதையுடன்  பான்ட் வாத்தியங்கள் முழங்க  சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை அவரது சீருடை தொப்பி, பதக்கம், வாழ்க்கை வரலாறு அடங்கிய பட்டயம் என்பனவும்  யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரால் அவரது  குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *