இறப்பர் தொழிற்சாலையில் திடீரென பரவிய தீ..! samugammedia

தங்கொவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 திடீரென தீ பரவியதையடுத்து கம்பஹா மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும்,

வட்டுபிட்டிவல முதலீட்டு வலயத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும் கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் தீயை கட்டுப்படுத்துவதற்கு அனுப்பப்பட்டன.

இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இன்று காலை வரை தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 

தீயினால் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *