நுவரெலியாவில் தபால் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க தபால் நிலையங்களை, குறுகிய கால இலாபத்துக்காக விற்பனை செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், தபால் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைய நிவர்த்தி செய்யப்பட வேண்டும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  2016 முதல் தபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் இதனால் திணைக்களத்தில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன எனவும், எனவே, புதிய நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும்  தபால் நிலைய ஊழியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *