கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு…! தமிழ் மொழி மூலம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை சாதனை…!samugammedia

இன்று காலை வெளியான 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

அதேநேரம், 13 ஆயிரத்து 588 பேர் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்றுள்ளதுடன் கண்டி மஹாமாய மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அத்துடன்,  யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *