நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்கலைக்கழகமொன்றின் 180 மருத்துவபீட மாணவர்கள் ஹன்தான மலைத்தொடரில் சிக்கியுள்ளனர்.
அதாவது இதில் 60 ஆண்களும், 120 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரும், இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலைத்தொடரில் சிக்கியுள்ள மாணவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.




