கிளிநொச்ச்சியில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு! samugammedia

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சொயலக பிரிவுக்குட்ப்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று 03.12.2023  நடைபெற்றது.

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப்பாதுகாப்பு மற்றும் போசணையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்ததான மீன் குஞ்சுகளை வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்  கீழ் கடந்த மாதம் 19.11.2023 ஆம் திகதி  புதுமுறிப்பு மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு 150000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. அதற்கு மேலதிகமாக இன்றைய தினம் மேலும் 50000 மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

குறித்த நிகழ்வில்  தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *