16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிய நிலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் பதுளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரை விட்டு பிரிந்த நிலையில் தனது பாட்டியுடன் குறித்த பாடசாலை மாணவி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது 20 வயது காதலன் முச்சக்கரவண்டியில் வந்து பதுளை சருங்கல் கந்தவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அன்று தான் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு மாணவி வெளியேறினாள்.
இந்நிலையில் காதலனுடன் சென்றபோதே அங்கு குற்றம் நடந்ததாக தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டுக்கு வந்த இந்த பாடசாலை மாணவி தனது பாட்டி சாப்பிட்ட மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் சுகவீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் ‘தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை பதுளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.





