ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு…!samugammedia

இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவை நியமிக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேசிய கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசோதனையினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நவம்பர் 06ஆம் திகதி அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழு நியமிக்கப்பட்டது. உலகக் கோப்பையை வென்ற இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் அடங்கிய குழுவில்; ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க; ஐராங்கனி பெரேரா, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி; அர்ஜுன ரணதுங்க (தலைவர்); உபாலி தர்மதாச; ரகித ராஜபக்ஷ, சட்டத்தரணி; மற்றும் ஹிஷாம் ஜமால்தீன். இக்குழுவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மறுநாள், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் குழுவுக்கு 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பின்னர், நவம்பர் 13ஆம் தேதி, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க, தடை உத்தரவை நீக்கக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இருந்தபோதிலும், நவம்பர் 27 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, SLPP பாராளுமன்ற உறுப்பினர் ரணசிங்கவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். அதனைத் தொடர்ந்து ரணசிங்கவிற்கு பதிலாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக சுற்றுலாத்துறை அமைச்சராக கடமையாற்றிய ஹரின் பெர்னாண்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது நியமனத்தின் பின்னர், அமைச்சர் பெர்னாண்டோ, டிசம்பர் 12 அன்று, ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவை கலைப்பதற்கான புதிய அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார். இதன்படி, புதிய அறிக்கையின் மூலம், நவம்பர் 05, 2023 தேதியிட்ட குறிப்பு எண். 2356/43ஐக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் 13ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *