இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வடமாகாணத்தினை பிரதித்துவப்படுத்தும் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கொண்ட குழுவினர்கள் இன்று(15) வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதில் வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பு, புதிய அதிபர்களின் நியமனங்கள், மற்றும் ,போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர் உள்ளிட்ட 05 மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.









