பொதுஜன பெரமுனவின் மாநாட்டால் வெடித்தது சர்ச்சை…!இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!samugammedia

நேற்றையதினம் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டிற்கு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை வாகனங்கள் மற்றும் கமரா உபகரணங்களுடன்  அழைத்து வந்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னில் இருந்து நாடு வரை அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பிரிவின் ஊழியர்கள் நிறுவனத்தில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் நிறுவனத்தில் பணிக்குச் சென்றுள்ளார்களா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை நேற்றையதினம் மாநாடு இடம்பெற்ற சுகததாச மைதானத்திற்குள்  கூட்டுத்தாபனத்தின் வாகனம் காணப்பட்டதாகவும் அரச வாகனங்கள் உள்ளே நுழைந்ததுடன் கேமராமேன்கள், கேமரா கருவிகள் அனைத்தும் சுகததாச மைதானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *