மொட்டு மீண்டும் மலரும்…! பொதுஜன பெரமுன மாநாட்டில் பசில் சூளுரை…!samugammedia

எந்த தேர்தல் நடந்தாலும் பொதுஜன பெரமுனவே  நிச்சயம் வெற்றி பெறும். மேலும் அந்த உரிமைக்காக நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்.அதேவேளை நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம் எனவும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுகததாச அரங்கில் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாங்கள் சிங்கத்தைப் போன்றவர்கள் – எங்கள் மீதுகல் எறிந்தால் திரும்பி பார்த்து அது யார் என்று பார்ப்போம். எங்கள் மீது கற்களை எறியாதீர்கள். இனிவரும் காலங்களில் பார்த்துக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை சிறீலங்கா பொதுஜன பெரமுனவே அடுத்து ஆட்சி அமைக்கும். முன்பைவிட பலமான அரசாங்கத்தை நாம் அமைப்போம். எந்தத் தேர்தல் நடந்தாலும் – அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை உருவாக்கத் தயாராவோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *