பதறவைக்கும் கஹாவத்தை படுகொலை…! இளைய மகள் கைது…!samugammedia

கடந்த 13ஆம் திகதி கஹவத்தை வெள்ளந்துறையில் வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் இளைய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (16) அதிகாலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளதுரை வெலவத்தையைச் சேர்ந்த ஜயசுந்தர முதியன்செலாவைச் சேர்ந்த வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு  படுகொலை  செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை  செய்யப்பட்ட தாய் சந்தேக நபருடன் வீட்டில் தங்கியிருந்தார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, கஹவத்தை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட இளைய மகளை கைதுசெய்துள்ளனர்.

அரசாங்கத்தில் பணியாற்றும் 38 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது தாயை படுகொலை செய்த சில மணித்தியாலங்களின் பின்னர் வீட்டின் பின்புறம் சென்று இரத்தக் கறைகளை சுத்தம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *